Monday, September 30, 2013

ஏறாவூர்'அறபா'வின் முன்னாள் அதிபர் ஏ.சி.முகம்மத் சயீத் அவர்களின் அறப்பணி நினைவுகளின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா [ - sabras - ]


மட்ஃஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஜனாப். ஏ.சி.முகம்மத் சயீத் அவர்களின் அறப்பணி நினைவுகளின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 07.09.2013 ம் திகதி மட்ஃஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் அலி ஸாஹிர் மௌலானா மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலையின் தற்போதைய அதிபர் ஹாஜியானி.பஹியா அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் ஜனாப். ஏ.சி.முகம்மத் சயீத் அவர்களும், அதிதிகளாக உற்பத்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஸீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகர சபை முதல்வர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லிம், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், முன்னாள் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஜெய்னுதீன், கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.எல்.ஏ.லத்திப் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
36 வருடங்கள் கல்விப்பணியாற்றி 03.06.2013ல் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.சி.முகம்மத் சயீத் அவர்கள் 12.05.1977ல் மட்ஃஏறாவூர் அல் முனீரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக தனது முதல் நியமனத்தை பெற்றார். இவர் பின்னர் அலிகார் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் போது ஏறாவூர் பிரதேச கல்வி அலுவலகத்திற்கு தற்காலகமாக விடுவிக்கப்பட்ட அவர் அங்கு திட்டமிடல் உதவியாளரக பணியாற்றிக் கொண்டிருக்கும் வேலையில் அறபா வித்தியாலயத்தில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் உட்பட பலரது அழுத்தத்திற்கு மத்தியில அதிபர் பதவியை 03.06.1996ல் பொறுப்பேற்ற இவர் 03.06.2013 வரையான 17 வருடங்கள் அறபா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார்.
இந்த 17 வருட காலப்பகுதியில் அறபா பல சாதனைகளையும் முன்னேற்றங்களiயும் கண்டுள்ளது என்பது ஏறாவூரைப் பொறுத்தவரை அனைவரும் அறிந்த ஒரு விடயமாக இருக்கின்றது. அதிபர் அவர்களது பணிகள், அறபாவின் முன்னேற்றம் தொடர்பில் சிறப்பு மலரில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சிறப்பு மலரின் ஆய்வுரையை கிழககு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள்துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ் ஷேய்க்.எம்.டீ.எம்.றிஸவி (மஜீதி) நிகழ்த்தினார்மலரின் முதல்ப்பிரதியை அமைச்சர்பஸீர்சேகுதாவூத் முன்னாள்அதிபர் ஏ.சி.முகம்மத் சயீத் அவர்களுக்கு வழங்கி வெளியிட்டு வைத்தார்என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர்,நலன் விரும்பிகள், அதிபர், ஆசிரியர்கள்,மாணவர்கள்இணைந்து ஏற்பாடு செய்த இந் நிழ்வின போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo