Monday, October 7, 2013

ஏறாவூர்- சவுக்கடி கடலில் சுமார் 35 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் சிக்கின

ஏறாவூர் – சவுக்கடி கடலில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடையுடைய பாரை மீன்கள் மீனவர்களது கரைவலையில் சிக்கியுள்ளன. ஆறு வலைகளில் பல்லாயிரக் கணக்கான பெறுமதி மிக்க மஞ்சள் பாரை மீன்கள் சிக்கியதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.

இந்த மீன்கள் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

இம்மீன்கள் தலா 5 அல்லது ஆறு கிலோ கிராம் எடையைக் கொண்டவையாகும்.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. - See more at: http://www.yarlminnal.com/?p=56755#sthash.m522RPf5.dpuf
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. - See more at: http://www.yarlminnal.com/?p=56755#sthash.m522RPf5.dpuf

கடந்த பல மாத காலமாக அடிக்கடி ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் மீன்டித் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் திடீரென பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் சிக்கியதனால் மகிழ்ச்சியடைந்து ள்ளனர்.

வரலாற்றில் முதல் தடவையாக ஏறாவூர் – சவுக்கடி கடற்பரப்பில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பாரை மீன்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி -srilanka muslim nation
மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியின் போது பெருமளவு பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.
இன்று காலை கரைவலைத் தொழில் ஈடுபட்டிருந்த போது சுமார் 35,000 கிலோ கிராம் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை பார்வையிட அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் கூடி நின்றனர்.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
- See more at: http://www.yarlminnal.com/?p=56755#sthash.m522RPf5.dpuf

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo