Thursday, January 27, 2011

ஏறாவூர் நகர சபைக்கான பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் இன்று கையளிக்கப்படுகின்றது

நடைபெறவிருக்கும் ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலுக்கு போட்டியிடவிருக்கும் பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன  இன்று
(27/01/2011) தமது வேட்புமனுக்களை  தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்தோடு  பல சுயேற்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் நடைபெறுவதுடன் அது இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வரவிருக்கிறது

மின்சாரம் தாக்கி காயமடைந்தவர் மரணம்

ஏறாவூர் காட்டுமாமரத்தடியில் (23/01/2011) அன்று ஏற்பட்ட மின்சார தாக்கத்தினால் காயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாப் செய்யது அலி ஜனூஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று வபாத்தானார்.இச்சம்பவத்தில் ஏற்கனவே நஸீர் என்பவர் சம்பவ தினமே உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது 

Wednesday, January 26, 2011

ஓய்ந்திருந்த மழை மீண்டும்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ஓய்ந்திருந்த மழை தற்போது பெய்ய ஆரம்பித்துள்ளது.இதனால் கடந்த பெரு வெள்ளத்தினால்  பலத்த பொருளாதார சேதத்தையும்,மரணங்களையும் கண்ட மக்கள் இம்மழையை பீதியோடு நோக்குகின்றனர்.

ஏறாவூர் நகர சபைக்கான UPFA வேட்பாளர் தெரிவு பூர்த்தி

நடைபெறவிருக்கும் ஏறாவூர் நகர சபைக்கான ஆளூம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு பலத்த போட்டிக்கு மத்தியில் நிறைவுக்கு வந்திருப்பதாகவும் இதில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தலைமையிலான குழுவினர் களமிறங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் நேற்று கொழும்பில் நடைபெற்றதகாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு ஏறாவூரிலிருந்து 7 பேர் தெரிவு

பொது நிர்வாக அமைச்சினால் நாடாத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொது முகாமைத்துவ உதவியாளர்களை சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சையில் ஏறாவூரைச் சேர்ந்த 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.பரீட்சை முடிவுகள் பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விரிவான பரீட்சை முடிவுகளுக்கு 

Tuesday, January 25, 2011

எமக்கு உதவுங்கள்

எமது அன்பான வாசகர்களே எமது பிரதேசம் பற்றிய தகவல்கள்,  நிகழ்வுகள் பற்றி எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் எமது தளத்தில் பிரசுரிக்க தயாராக இருக்கின்றோம்.அத்தோடு  உங்களது மேலான ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் எமக்கு வழங்கி இவ்இணையதளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

ஏறாவூர் நகர சபைக்கு பல முனைப் போட்டி

எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தரமுயர்த்தப்பட்ட ஏறாவூர் நகர சபைக்கு பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது இத்தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவுகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் உள்ளூர் அரசியல்வாதிகள் தங்களது பெயரை வேட்பாளர் பட்டியலில் இடம்பெறச்செய்வதில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

Monday, January 24, 2011

ஏறாவூர் பிரதேச சபை நகர சபையாக தரமுயர்வு

இதுவரை காலமும் பிரதேச சபையாக இருந்து வந்த ஏறாவூர் தற்போது நகர சபையாக  தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரை உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாவினால் கடந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்டது.

Tuesday, January 18, 2011

ஏறாவூரில் வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகின்றது

கடந்த மூன்று வாரகாலமாக எமதூரில் தொடர்ந்தேச்சையாக பெய்து வந்த பெரு மழையினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டதோடு பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிரு ந்து வந்த  நிலையில் தற்போது மழை ஒரளவு நின்று வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகின்றது.இதனால் அகதி முகாம்களில் தங்கியிருந்த மக்கள் படிப்படியாக தங்களது வீடுகளுக்கு திரும்பி வருவதுடன் அவர்கள் தங்கியிருந்த பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளில்  ஊரிலுள்ள பொது அமைப்புக்களும்,உள்ளுர் வெளியூர் தனவந்தர்களும், அரசியல்வாதிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருவது பாரட்டப்படவேண்டியதொன்று.

Friday, January 14, 2011

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால், எறாவூரில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.இவர்கள் உண்ண உணவில்லாது அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக குழந்தைகள் பால்மா இன்றி அவதிப்படுகின்றார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் விரைவாக உதவ முன்வரவேண்டும் என எமது இணையதள குழு கேட்டுக்கொள்கின்றது

ஏறாவூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 வயது சிறுவன் பலி

ஏறாவூரில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில்  முனையவளவு வீதியை சேர்ந்த 10 வ யதுடைய ஜஃபர் முகம்மட் சுகையில் என்னும் சிறுவன் வபாத்தாகியுள்ளார். இவரின் ஜனாஸா கடற் படையின் உதவியுடன் இன்று காலை (14/01/2011) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo