Sunday, March 22, 2015

காத்தான்குடி சாதனையாளர் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்


(எம்.எச்.எம். நளீர்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபை நடாத்திய 2015 சாதனையாளர் பாராட்டு விழாவும் ,கௌரவிப்பு நிகழ்வும்- 21-03-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கல்வி அபிவிருத்திச் சபையின் ஸ்தாபகத் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர், சிப்லி பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday, March 7, 2015

கிழக்கு மாகாண அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் ஆற்றிய உரை...


அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கிழக்கு மாகாண சபையின் கௌரவ உறுப்பினர்களே, கணவான்களே, சீமாட்டிகளே உங்கள் அனைவருக்கும் எனது காலை வந்தனங்கள்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களை கிழக்கு மாகாணத்திற்கு வரவேற்பதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பத்தை பெரும் பேறாகக் கருதுகிறேன். மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும் தாய் நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமான தனது முயற்சியில் அனைத்து சமூகங்களையும் குழுவினர்களையும் அரவணைத்து பங்குபெறச் செய்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதிலும் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதிலும் தாங்கள் தலைமைத்துவம் வழங்கியுள்ளீர்கள். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் முன்னெடுப்புக்கள் மற்றும் கொள்கைகள் இலங்கையர் மத்தியில் வளமான எதிர்காலத்திற்கும் சுபீட்சமான வாழ்க்கைக்குமான புதிய நம்பிக்கையுணர்வை விதைத்துள்ளதுடன் பாதுகாப்புணர்வையும் அதிகரித்துள்ளது.

மக்கள் குறை தீர்க்கும் பணியில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ...



மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் முதலமைச்சரை சந்தித்தனர். இச்சந்திப்பி;ன் போது அம்மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகளை முதலமைச்சருக்கு தெரியப்படுத்தினர்.
இதனை கவனத்தில் எடுத்த முதலமைச்சர் இக் கிழக்குமாகாண தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து எதிர்கால வாழ்வினை வளம் பெறச் செய்வதே எனது நோக்கமும் சேவையுமாக அமையும் எனவும்  எவருக்கும் பாரபட்சமின்றி சமமாக சகல சேவைகளும் பகிர்ந்தளிக்கப்படுமெனவும்  இச்சந்திப்பின் போது கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் உறுதியாக தெரிவித்தார்.

தகவல்
(எம்.எச்.எம். நளீர்)

மக்கள் மேம் பாட்டுக்கழக நேயம் அமைப்பின் உதவி வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்...


மக்கள் மேம் பாட்டுக்கழக நேயம் அமைப்பு ஏழை மக்களின் நலனுக்காக மேற்கொண்டு வரும் உதவிகளின் ஒரு கட்டமாக ஏறாவூரில் வாழும் வறிய குடும்பங்களுக்கு குடி நீர் பெறுவதற்கான உபகரனற்களும் மக்களுக்கு குடிநீர் தாங்கியும் நீர் பம்பிமோட்டர்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இந்த அமைப்பின் சேவைகளை பாராட்டியதோடு உதவிபெறுபவர்கள் தொடர்ந்தும் உதவி பெற்றும்வரும் தலைவிதியை மாற்றியமைத்து நாம் சொந்தகாலால் தலைநிமிர்ந்து வாழவேண்டிய நிலை உருவாகும் காலம் வரவேண்டும் என கூறினார்.

கிழக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையின் சுருக்கம்


கிழக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது . இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாணமுதலமைச்சர் ஆற்றிய உரையில் . மாகாணபொதுநிருவாகத்தினால்அரசாங்கத்தின்நூறுநாள்திட்டத்தினைஅடிப்படையாக கொண்டு கிழக்கு மாகாண பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கும்  இந்நிகழ்வுக்குஆளுநர்ஒஸ்ற்றின்பெர்நான்டோ, காணி அமைச்சர் எம் டி.எஸ்.குணவர்த்தன, மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் , நகர ,பிரதேச சபை தவிசளர்கள் , பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ,திணைக்கள செயலாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு ஏறாவூரில் அமோக வரவேற்பு


கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற ஹபீஸ் நசீர் அஹமட்டை ஏறாவூர் சமூகம் நேற்று  பாராட்டி கௌரவித்தனர் ஏறாவூர் மண்ணில் பிறந்த முதலமைச்சரை ஊர்மக்களும், கல்விமான்களும், உலமாக்களும் இளைஞர் அமைப்புக்கள் என பலரும் அழைத்து வருவதை படத்தில் காண்க.

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo