History

ஏறாவூரின் பூர்வீக வரலாறு
இலங்கையின் கீழ்த்திசைப்புறமாக அமைந்துள்ள மட்டக்களப்பின் வடமேற்கே சுமார் 12 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் வடக்கே வங்கக் கடலையும், கிழக்கே ஆறுமுகத்தான் குடியிருப்பு எனும் தமிழ் கிராமத்தையும் மேற்கே செங்கலடிப் பிரதேசத்தையும், தெற்கே மட்டக்களப்பு கடலைரியும் எல்லைகளாக கொண்டுள்ளது.
ஏறாவூர் முஸ்லிம்களின் வரலாறு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டது. அக்காலத்தில் வாழ்ந்த பழங்குடிகளான பட்டாணியர்களும், முக்குவர்களும், திமிலர்களை விரட்டி பல படைகளையும் காவலரண்களையும் இங்கு அமைத்தனர். இதனால் இவ்வூருக்கு எதிரிகள் வருவது தடைப்பட்டது. இதனால் எதிரிகளை ஏற விடாது தடுத்த ஊர் என பொருள்பட ”எறாவூர்” என அழைக்கப்படுகின்றது.இன்று மட்டக்களப்பில் வாழும் சுமார் 430,000 மக்களில் ஏறாவூரில் மாத்திரம் 35,000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.   

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo