Monday, October 7, 2013

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஏறாவூர் றகுமானியா வித்தியாலய மாணவர்கள் (படம் இணைப்பு)

நன்றி -Umarlebbe Safeer

ஏறாவூர்- சவுக்கடி கடலில் சுமார் 35 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் சிக்கின

ஏறாவூர் – சவுக்கடி கடலில் சுமார் 35 ஆயிரம் கிலோ எடையுடைய பாரை மீன்கள் மீனவர்களது கரைவலையில் சிக்கியுள்ளன. ஆறு வலைகளில் பல்லாயிரக் கணக்கான பெறுமதி மிக்க மஞ்சள் பாரை மீன்கள் சிக்கியதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.

இந்த மீன்கள் கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

ஜனாதிபதி முன்னிலையில் சி.வி. பதவியேற்றார்

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

முதலில் வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட சி.வி.விக்னேஸ்வரன், அதனைத் தொடர்ந்து வட மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

Friday, October 4, 2013

ஏறாவூர் மிச்சி நகர் கிராமத்தைச் சேர்ந்த  நான்கு வயதுடைய ரிப்தி அஹமட் செவிப்புலனற்ற காரணத்தினால் பேச முடியாத சிறுபாலகனின் சத்திரச் சிகிச்சைக்காக பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் ரூபா 27 இலட்சம் காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு  03-10-2013  ஏறாவூரில் அமைந்துள்ள  தவ்ஹீத் ஜும் ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி, சிறுபாலகன் ரிப்தி அஹமட் கையில் காசோலையை வழங்கி வைத்தார்.

ஏறாவூரிலிருந்து பிரதீபா பிரபா தேசிய விருது பெருவதற்காக 4 ஆசிரியர்கள் தெரிவு

மஹிந்த சிந்தனையின் புனர்வாழ்வு திட்டத்துக்கு அமைய எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் சமூகமொன்றை உருவாக்கும் முகமாக, பயன்மிக்க கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிபர்கள்,ஆசிரியர்களால் வழங்கப்படும் அளவிலா சேவையை கௌரவிக்குமுகமாக "ஆசிரியர் பிரதீபா பிரபா " என்ற தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

Thursday, October 3, 2013

உழ்ஹிய்யாவுக்கு மாற்று வழிகள் கிடையாது - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஊடக அறிக்கை


உழ்ஹிய்யா கடமையை இந்நாட்டு முஸ்லிம்கள் பண்டுதொட்டு நிறைவேற்றி வருகின்றனர். என்ன இடையூறுகள் வந்தபோதிலும் அதனை நிறைவேற்றவே எந்தவொரு முஸ்லிமும் விரும்புவார்இந்நாட்டுக்கு இஸ்லாம் வந்துசேர்ந்தது முதல் நம்நாட்டு முஸ்லிம்கள் சன்மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்து வந்துள்ளனர்.

இடையிடையே எத்தனையோ இனக்கலவரங்களும் பிரச்சினைகளும் தோன்றிய போதிலும் சமயக் கடமைகளில் எந்தவொன்றையும் விட்டுக்கொடுக்கவோ அல்லது விட்டுவிடவோ இல்லை. அந்த அளவுக்கு அவர்களது ஈமானும் பலவீனமுற்று இருக்கவில்லை. நாம் இப்போது இனவாதிகளென காட்டப்படுவோம் என்பதற்காக அல்லது பிறரின் கண்டனங்களுக்காக அல்லது அவர்களது எதிர்ப்புகளுக்காக உழ்ஹிய்யாக் கடமையை விட்டுவிடவோ, நிறுத்திவிடவோ ஷரீஅத் எமக்கு அனுமதிக்கவில்லை.

Wednesday, October 2, 2013

ஏறாவூர் ரஹ்மானியா மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை


இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்விவலய ஏறாவூர் கோட்ட படசாலைகளில் ஒன்றான ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலய மாணவன் செல்வன் ஏ,ஜே.அமான் அஸ்கர்(தாய் தந்தையை இழந்தவர்) 191 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரெண்டாம் இடத்தைப் பிடித்து இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் அதே பாடசாலை மாணவியான செல்வி ஜே.பாத்திமா நதா 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் ஏழாம் இடத்தை தக்கவைத்துள்ளார்.இப்பாடசாலையில் மொத்தமாக பத்தொன்பது மாணவ செல்வங்கள் புலமைப்பரிசில் திட்டத்துக்குள்  உள்வாங்கப்பட்டுள்ளனர்.

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை - தமிழ் மொழி மூலம் வெட்டுப்புள்ளி விபரம்

ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன.





வெட்டுப்புள்ளி 156


கொழும்பு,

கம்பஹா,

களுத்துறை,

கண்டி,

மாத்தளை,

காலி,

மாத்தறை,

குருநாகல்


வெட்டுப்புள்ளி 155

மட்டக்களப்பு,

ஹம்பாந்தோட்டை


வெட் டுப்புள்ளி 154

அம்பாறை,

யாழ்ப்பாணம்,

வவுனியா


வெட்டுப்புள்ளி 153.

கிளிநொச்சி,

நுவரெலியா,

மன்னார்,

மொனராகலை,

முல்லைத்தீவு,

இரத்தினபுரி,

பொலன்னறுவை


வெட்டுப்புள்ளி 152

புத்தளம்,

திருகோணமலை

வெட்டுப்புள்ளி 151 

அநுராதபுரம்


பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம்,

நன்றி jaffnamuslim.com


Tuesday, October 1, 2013

ஏறாவூர் கோட்ட மட்ட பாடசாலைகளிருந்து 74 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி


  இன்று வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளிருந்து ஏறாவூர் கோட்டத்திலிருந்து 74 மாணவர்கள்   சித்தி அடைந்துள்ளனர்
  1. ரஹ்மானியா ம.வி                                    19 மாணவர்கள்
  2. அல் அஷ்கர் ம.வி                                      19 மாணவர்கள்
  3. அறபா ம.வி.                                                 12 மாணவர்கள்
  4. அல் ஜுப்ரியா ம.வி.                                  07 மாணவர்கள்
  5. அல் முனீரா ம.வி                                      06 மாணவர்கள்
  6. மிச் நகர் வித்                                                05 மாணவர்கள்
  7. மாக்கான் மாக்கார் ம.வி                         03 மாணவர்கள்
  8. அஷ்ரப் வித்                                                 01 மாணவர்
  9. அமீரலி வித்                                                 01 மாணவர்
  10. அப்துல் காதர் வித்                                    01 மாணவர்   

                                             நன்றி -sedaevr

கிழக்கு மாகாண சபையில் பெரும் அமளி துமளி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை நடவடிக்கையும் ஒத்திவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு அதன் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று (01) செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
 

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் நாளை இந்தியா பயணம்;




இந்தியாவின் சென்னையில் நடைபெறவுள்ள "நிலைபேறான அபிவிருத்தியும்,சுற்றாடல் முகாமைத்துவமும் " எனும் தலைப்பிலான இரண்டு மாத செயலமர்வில் கலந்துகொள்வதற்காக ஏறாவூரை சேர்ந்த, காத்தான்குடி பிரதேச செயலாளர் ஜனாப் எஸ்.எச் முசம்மில் அவர்கள் நாளை இந்தியாவிற்கு பயணமாகிறார்.
  இங்கு நடைபெறவிருக்கும் இச்செயலமர்வுக்காக இலங்கையிலிருந்து  சகோதரர் முசம்மில் அவர்களுடன் ,குருநாகல் பிரதேச செயலாளரும் இச்செயலமர்வில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பாக இந்த இருவர் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றனர். சர்வதேசத்தின் பல நாடுகளிலிருந்தும் உயர்நிலை உத்தியோகத்தர்கள் இச்செயலமர்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை உலக சிறுவர் தினத்தில் வெளியாகும்!

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
இவ்வருடத்தில் இருந்து நடைபெறும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் உலக சிறுவர் தினத்தில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். இந்த புதிய நடைமுறை இந்த வருடத்திலிருந்து அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அர­சுக்­கான மு.கா.வின் ஆதவை மீள்­ப­ரி­சீ­லிக்க வேண்­டி­வ­ரும்: ஜெமீல்

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு கிழக்கு மாகாண சபை தீர்வு வழங்காமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யுமானால் மாகாண ஆட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி வருகின்ற ஆதரவை மீள்பரிசீலிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் எச்சரித்துள்ளார்.
தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று திங்கட்கிழமை (30) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் புல்மோட்டை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக அவசர பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இதனை வழிமொழிந்து உரையாற்றியபோதே மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo