Thursday, January 23, 2014

ஆசிரியையின் தவறான கருத்ததுப் பரிமாறலினால் 23 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

(எம்.எஸ். எம் ஸப்றாஸ்)

உணவு நஞ்சானதால் ஏறாவூர் றகுமாணியா வித்தியாலய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி என்ற செய்தி நேற்று (21) காலை ஏறாவூர் எங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. அதேவேளை பல ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 11.35 மணிக்கு உணவு நஞ்சானதால் மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி றகுமானியா வித்தியாலயத்தின் தரம் 5ல் கல்வி கற்கும் குறித்த ஒரு வகுப்பைச் சார்ந்த மாணர்கள் மாத்திரமே, இவ்வாறு ஏறாவூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களை சோதனையிட்ட ஏறாவூர் தள வைத்தியசாலையின் தளவைத்திய அதிகாரி Dr.பழீல் தலைமையிலான குழுவினர் மாணவர்கள் வாந்தி, வயிற்றோட்டத்திற்கு உட்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகரி ஐ.எல்.இசட்.மஹ்றூப், மட்டக்களப்பு மத்தி வலக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை, ஏறாவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி Dr.தாரிக் ஆகியோர் சென்று பார்வையிட்டதோடு பாடசாலை மாணவர்களிடமும், அதிபரிடமும் இதற்கான விளக்கங்களை கேட்டறிந்து கொண்டனர்.

இது தொடர்பில் பாடசாலை அதிபர் எம்.பி.எம்.ஏ சக்கூர் அவர்களிடம் கேட்டபோது,
‘சம்பவம் நிகழ்ந்த நேரம் ஏறாவூர் பிரதேச கல்விக் கோட்ட அதிபர்களுக்கான கூட்டம் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே, நானும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது பாடசாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் எமது பாடசாலை மாணவர்கள் உற்கொண்ட உணவு நஞ்சானதால் வயிற்று வலியினால் அவதிப்படுபதாகும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டது.

உடனடியாக நான் வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து 200 மீற்றர் துரத்தில் உள்ள ஏறாவூர் தள வைத்தியசாலைக்கு வந்து மாணவர்களின் நிலைமை தொடர்பில் தளவைத்திய அதிகாரி Dr.பழீல் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டேன். அதன் பிரகாரம் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் நலமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் இதுவரையில் வாந்தியெடுக்கவோ, வயிற்றோட்டத்திற்கோ மயக்க நிலைக்கோ உற்படவில்லை என்றும், மாணவர்கள் சாதாரண நிலையிலேயே இருப்பதாவும் தெரிவித்தார். அத்தோடு மாணவர்களை பார்வையிட்டபோது, இந் நிலையினை நான் நன்கறிந்து கொண்டேன். வைத்தியசாலைக்கு வெளியில் குழுமியிருந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களிடம் உடனடியாக இந் நிலமையினை தெளிவுபடுத்தினேன்.

இது தொடர்பில் பாடசாலை மாணவர்களிடம் வலயக்கல்வி பணிப்பாளர், மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோருடன் நானும் விசாரணையை மேற் கொண்டபோதே, இதன் உண்மை நிலை தெளிவாக தெரிந்தது. தரம் 5ல் கல்வி கற்கும் ஒரு வகுப்பு மாணவிக்கு மாத்திரம் ஆசிரியை கூறிய கருத்தின் காரணமாக தான் உட்கொண்ட உணவு தொடர்பில் அச்ச நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் வாந்தி வருவது போன்று உணர்வதாகவும், வயிறு வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குறித்த வகுப்பு ஆசிரியை அந்த வகுப்பு மாணவர்கள் அணைவரையும் அழைத்துக்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

ஆனால், நேற்று இடைவேளை உணவை உட்கொண்ட வேறு எந்த ஒரு வகுப்பு மாணவர்களுக்கும் இவ்வாறான நிலை ஏற்படவில்லை. அத்தோடு அனுமதிக்கப்பட்ட மாணவர்களும் தேகாரோக்கியமாவே உள்ளனர். மாணவர்களின் நிலையில் மாற்றமெதுவும் இல்லாமல் அவர்கள் சந்தோசமா சிரித்து தேகாரேக்கியமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அச்சத்தின் காரணமா அனுமதித்து வந்தனர். அனுமதிக்கப்பட்ட மாணவர்களும் தற்போது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்’ என்று தெரிவித்தார்.

‘எது எவ்வாறு இருப்பினும், உணவு மாதிரிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக கொழும்புக்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் விரைவில் வெளிவரும் என அறிகின்றோம். அத்தோடு குறித்தி ஆசிரியையிடம் விளக்கம் ஒன்றை கோருமாறும் வலக் கல்விப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, இது தொடர்பில் பாடசாலை நிருவாகம் அடுத்த கட்ட நடவெடிக்கையை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo