Monday, October 25, 2010

நிருவாக சபை தெரிவு

ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள முதலாம் குறிச்சி முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் நிருவாக சபை தெரிவு இன்று (10/24/2010) நடைபெற்றது. இதன்போது தலைவராக சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பஸீர் சேகுதாவூத் அவர்களும், மற்றும் நிருவாக  தெரிவும் இடம் பெற்றது

Saturday, October 23, 2010

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு நிறுவனம் அங்குராப்பணம்

ஏறாவூரில் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு உதவும் முகமாக நிறுவனம் ஒன்று தாறுல் ஹுதா என்ற பெயரில் இன்று(22/10/2010) அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த உலமாக்களின் பங்குபற்றுதலுடன் இதற்கான வைபவம் நடைபெற்றது.இந்நிறுவனம் மூலம் இஸ்லாம் பற்றி போதிக்கப்படுவதுடன், தொழில் முயற்சிகளும் வழங்கப்படவிருக்கின்றது.

Wednesday, October 20, 2010

சர்வதேச கைகழுவுதல் தினம் 2010 ஏறாவூரில்..........

இவ்வருட கைகழுவுதல் தினத்தையொட்டி ஏறாவூரின் அனைத்து பாடசாலைகளிலும் இன்று(20/10/2010) யுனிசெப் நிறுவனத்தின் அனுசரனையுடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு , கைகழுவுதல் பற்றிய நுட்பங்களும் வழங்கப்பட்டு வருகின்றது .

மகிழ்ச்சியில் ஏறாவூர் விவசாயிகள்...........

இம்முறை மழைக்காக காத்திருந்த நெற்செய்கையில் ஈடுபடும் ஏறாவூர் விவசாயிகள் நேற்றிரவு பெய்த சிறு மழையால் மகிழ்ச்சியடைந்ததோடு தங்களது வயல் நிலங்களுக்கு சென்று பண்படுத்தல் வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்

Tuesday, October 19, 2010

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் குடிநீர் பற்றாக்குறை.......

ஊரின் வாவிக்கரையோரமாக அமைந்துள்ள பிரதேச செயலகத்தின் சேவைக்காக நாடிவரும் மக்களும், தொழில்புரியும் ஊழியர்களும் சுத்தமான குடிநீர் இல்லாது அல்லல்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது..இது பற்றி பிரதேச செயலாளர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களும், ,ஊழியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்

ஹஜ் குழுவொன்று நாளை பயணம்….

ஊரிலிருந்து நாளை (20/10/2010)ம் திகதி 25 பேர் கொண்ட ஹஜ் குழுவொன்று மீராமுகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலிருந்து காலை 7 மணிக்கு புறப்படவிருக்கின்றனர்.இவர்கள் பாதுகாப்பாக சென்று திரும்பி வர எமது இணையதள குழு பிராத்திக்கின்றது.

Monday, October 18, 2010

இம்முறை 5800 பேர் இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு......

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை இலங்கையிலிருந்து 5800 பேருக்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது முதலாவது குழு  நேற்று  புறப்பட்டுச் சென்றது. இறுதிக் குழு எதிர்வரும் காலங்களில் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ர்றன.
இன்னும் சில தினங்களில் எமது பிரதேசத்தின் உடனடி தகவல்களை புதுப்பொலிவுடன் எமது தளத்தில் எதிர்பாருங்கள்

நூற்றாண்டு விழாவை நோக்கி அலிகார்......

ஊரின் முதன்மைப் பாடசாலையாக கருதப்படும் அலிகார் எதிர்வரும் 2012 ம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறது.இதன் ஒரு அம்சமாக மாணவர் விடுதி திறப்பு விழா கடந்த வாரம் வெகு விமர்சையாக நடைபெற்றது .
இது பற்றி மேலதிக தகவல் இருப்பின் எமக்கு அறிய தரவும்.

ஏறாவூரிலிருந்து ஹஜ் குழு பயணம்

கடந்த வருடங்களை போன்று இம்முறையும் சுமார் 100 பேர் ஊரிலிருந்து புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவுள்ளதாக அறிய கிடைக்கிறது.இவர்கள் பாதுகாப்பாக சென்று திரும்பி வர எமது இணையதள குழு பிராத்திக்கின்றது.இது பற்றி மேலதிக தகவல் தெரிந்திருப்பின் எமக்கு அறிய தரவும்

Sunday, October 17, 2010

வீதி விளக்கு இல்லாமை

ஏறாவூரின் வாவிக்கரைக்கு நாளந்தம் பலர் பொழுதை கழிப்பதற்காக வருகை தருகின்றனர்.ஆனால் மாலையானதும் வீதி விளக்குகள் இல்லாமையால் இருளடைந்த நிலையில் காணப்படுகின்றது.எனவே இப்பகுதிக்கு வீதி விளக்குகளை பொருத்தி பாவனையாளர்களுக்கு ஏற்ற இடமாக மாற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவிக்

பொறுப்பானவர்களின் கவனத்திற்கு

ஏறாவூரின் பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகான்கள் முறையாக அமைக்கப்படாததாலும் துப்பரவு செய்யப்படாமையாலும் சிறு மழைக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடை வியாபாரிகள் பலத்த நஷ்டமடைவதோடு வீதியால் பயணிப்பவர்களும் பலத்த சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.இது பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

பொறுப்பானவர்களின் கவனத்திற்கு

ஏறாவூரின் பிரதான வீதியில் அமைந்துள்ள வடிகான்கள் முறையாக அமைக்கப்படாததாலும் துப்பரவு செய்யப்படாமையாலும்  சிறு மழைக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடை வியாபாரிகள் பலத்த நஷ்டமடைவதோடு வீதியால் பயணிப்பவர்களும் பலத்த சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.இது பற்றி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

கட்டாக்காலி மாடுகளால் தொல்லை

ஏறாவூரின் வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளால் பாதசாரிகள் பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.அத்தோடு பல வீதி விபத்துக்களும், வீதி அசுத்தமின்மையும் ஏற்படுகின்றது.இப்பிரச்சினைக்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஏறாவூரில் வேளாண்மை விதைப்பு வேலைகள் மும்முரமாக………………………..

இலங்கையின் பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் இதுவரை காலமும் செய்கை பண்ணப்படாமல் இருந்த பதுளை வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள ஏறாவூர் முஸ்லிம்களுக்கு சொந்தமான சுமார் 12,000 ஏக்கர் வயல் நிலங்கள் தற்போது “உம்மாரி” செய்கைக்காக உழவடிக்கப்பட்டு விதைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.இதனால் தொழிலையிழந்திருந்த பலர் தொழில் வாய்ப்புக்களை பெற்று வருகின்றனர்

ஏறாவூரில் உள்ள அகதிகளுக்கு உதவுவோம்

அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள்  இலங்கை முஸ்லிம்கள்.இதன் ஒரு அங்கமாக பதுளை வீதீயை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் புலிகளால் விரட்டியக்கப்பட்டு இலங்கையின் வடக்கே ஏறாவூரின் சதாம் ஹுசைன்.மீராகேணி.மிச்நகர் எனும் பிரதேசங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல்  தற்போது வாழ்கின்றனர்.
இந்த இடங்கள்  இலங்கை முஸ்லிம்களுக்கு உரியதாகும் இதை 1990 காலப்பகுதிகளில் அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய விடுதலைப்புலிகள் தங்களின் காணிச் சுத்திகரிப்பின் ஒரு பகுதியாக முஸ்லிம்களை வதைத்து இடம்பெயரச் செய்தனர்
என்பது இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு.
தற்போது புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு  இப்பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை மீள் குடியேற்றி வருகிறது  இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட  மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் அப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள்,வீதிகள் புனரமைக்கப்படவேண்டியிருக்கிறது
.எனவே நாமும் எம்மால் முடிந்த உதவிகளை  வழங்கி இம்மக்களின் வாழ்வுயர இறைவன் தந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம்
                நன்றி

ஊரின் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்

ஏறாவூரின் அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக ஆளும்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் உறுப்பினர்களை கண்டு வந்திருக்கிறது. ஆனால் ஊரின் அபிவிருத்தி என்பது மற்றைய ஊர்களைவிட மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ளது.எனவே சகல அரசியல்வாதிகளும் தனிப்பட்ட பேதங்களை மறந்து ஊரின் அபிவிருத்திக்கு உழைக்க முன் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொழில் நுட்ப தகவல்கள்

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo