தகவல் www.lankamuslim.org பம்பலப்பிட்டி
முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அமைச்சர் ஏ.எச்.எம்.
பௌசியின் 4 கோடி ரூபா பெருமதியான காணி கட்டிடத்தை முஸ்லிம் மகளிர்
கல்லூரிக்கு கையளிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.
அவரது 75வது பிறந்த தினமான கடந்த
சனிக்கிழமை (13)ம் திகதி அன்று கல்லூரியில் பரிசலிப்பு விழா ஒன்று
நடைபெற்றது. அதிலே கலந்துகொண்டுஅமைச்சர் ஏ.எச்.எம் பௌசி மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இந் நிகழ்வு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர்
கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹாஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்றது. அதில் 5
ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவிகளை பாராட்டி சான்றிதழும்
பதக்கமும் அனிவிக்கப்பட்டது.
அங்கு மேலும் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர்
இக் காணியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததும் அடுத்த மாத
இறுதியில் இக் காணியையும் கட்டிடத்தையும் கல்லூரிக்கு சம்பிரதாயபூர்வமாக
கையளிப்பதாக அமைச்சர் பௌசி தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர் நான்
கொழும்பு மாவட்டத்தில் இளம் மேயராக பதவியேற்று கடந்த 50 வருடங்களாக இந்
நாட்டில் உள்ள முவீன மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றேன். கடந்த
காலங்களில் முவீன மக்களும் இணைந்து தனக்கு வாக்களித்தனால் கொழும்பு
மாவட்டத்தில் முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவனாக வந்துள்ளேன்.
சுகாதார,போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்
சுற்றாடல் அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களை பாரமெடுத்து என்னால்
முடியுமான அளவுக்கு எனது சமுகத்திற்கும் நாட்டுக்கும் சேவையாற்றியுள்ளேன்.
கடந்த யுத்த காலத்தின் போது
பயங்கரவாதிகளின் தனக்கு வைத்த 3 குண்டுதாக்குதலில் மயிரிழையில் உயிர்
தப்பியுள்ளேன். நான் மக்களுக்கு நல்லதையே செய்கின்றேன். அதற்காகவே இறைவன்
என்னை இத்தாக்குதலில் இருந்து பாதுகாத்துள்ளான் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment