Wednesday, October 2, 2013

ஏறாவூர் ரஹ்மானியா மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை


இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்விவலய ஏறாவூர் கோட்ட படசாலைகளில் ஒன்றான ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலய மாணவன் செல்வன் ஏ,ஜே.அமான் அஸ்கர்(தாய் தந்தையை இழந்தவர்) 191 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரெண்டாம் இடத்தைப் பிடித்து இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும் அதே பாடசாலை மாணவியான செல்வி ஜே.பாத்திமா நதா 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் ஏழாம் இடத்தை தக்கவைத்துள்ளார்.இப்பாடசாலையில் மொத்தமாக பத்தொன்பது மாணவ செல்வங்கள் புலமைப்பரிசில் திட்டத்துக்குள்  உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களை இரவு,பகல் என்று பாராது பயிற்றுவித்த ஆசிரியை ஆபிதா அவர்களும் ,கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஏ .சக்கூர் அவர்களும் இம்மாணவர்களுடன் நிற்பதைக்காணலாம்.

சென்றவருடமும் மாவட்டத்தின் இரண்டாமிடத்தை மட்டக்களப்பு மத்தி கல்விவலய ஏறாவூர் அல் அஷ்கர் பெண்கள் உயர்தர பாடசாலை மாணவன் எம்.மதீன் 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை ஏறாவூர் கோட்ட மட்ட பாடசாலைகளில் மொத்தமாக 74 மாணவ செல்வங்கள் புலமைப்பரிசில் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நன்றி: அபூ பயாஸ் /jaffnamuslim.com

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo