Tuesday, October 1, 2013

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் நாளை இந்தியா பயணம்;




இந்தியாவின் சென்னையில் நடைபெறவுள்ள "நிலைபேறான அபிவிருத்தியும்,சுற்றாடல் முகாமைத்துவமும் " எனும் தலைப்பிலான இரண்டு மாத செயலமர்வில் கலந்துகொள்வதற்காக ஏறாவூரை சேர்ந்த, காத்தான்குடி பிரதேச செயலாளர் ஜனாப் எஸ்.எச் முசம்மில் அவர்கள் நாளை இந்தியாவிற்கு பயணமாகிறார்.
  இங்கு நடைபெறவிருக்கும் இச்செயலமர்வுக்காக இலங்கையிலிருந்து  சகோதரர் முசம்மில் அவர்களுடன் ,குருநாகல் பிரதேச செயலாளரும் இச்செயலமர்வில் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பாக இந்த இருவர் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றனர். சர்வதேசத்தின் பல நாடுகளிலிருந்தும் உயர்நிலை உத்தியோகத்தர்கள் இச்செயலமர்வில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo