Wednesday, January 26, 2011

ஓய்ந்திருந்த மழை மீண்டும்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ஓய்ந்திருந்த மழை தற்போது பெய்ய ஆரம்பித்துள்ளது.இதனால் கடந்த பெரு வெள்ளத்தினால்  பலத்த பொருளாதார சேதத்தையும்,மரணங்களையும் கண்ட மக்கள் இம்மழையை பீதியோடு நோக்குகின்றனர்.

அத்தோடு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக  அழிவடைந்த நிலையில், பாதிக்கப்படாத எஞ்சிய சிறு தொகை வயல் நிலங்களை எவ்வாறு அறுவடை செய்து கொள்ளமுடியும் என்ற நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளனர்.எனவே இம்மழை ஓய்ந்து சீரான காலநிலை நிலவ வேண்டும் என மக்கள் இறைவனைப் பிராத்திக்கின்றனர்.

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo