Wednesday, January 26, 2011

ஏறாவூர் நகர சபைக்கான UPFA வேட்பாளர் தெரிவு பூர்த்தி

நடைபெறவிருக்கும் ஏறாவூர் நகர சபைக்கான ஆளூம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு பலத்த போட்டிக்கு மத்தியில் நிறைவுக்கு வந்திருப்பதாகவும் இதில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா தலைமையிலான குழுவினர் களமிறங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான வேட்பு மனுக்களில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் நேற்று கொழும்பில் நடைபெற்றதகாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஆனால் சிறீ லிங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் தெரிவு  இன்னும் நிறைவடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு முகம்மது உவைஸ், உமர்லெவ்வை ஹயாத்துமுகம்மது தலைமையிலான இரு சுயேட்சைக்குழுக்கள் நேற்று (25/01/2011) தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இதுவரை  ஏறாவூர் நகர சபைக்காக 16 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளன

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo