Sunday, October 17, 2010

ஏறாவூரில் உள்ள அகதிகளுக்கு உதவுவோம்

அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள்  இலங்கை முஸ்லிம்கள்.இதன் ஒரு அங்கமாக பதுளை வீதீயை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் புலிகளால் விரட்டியக்கப்பட்டு இலங்கையின் வடக்கே ஏறாவூரின் சதாம் ஹுசைன்.மீராகேணி.மிச்நகர் எனும் பிரதேசங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல்  தற்போது வாழ்கின்றனர்.
இந்த இடங்கள்  இலங்கை முஸ்லிம்களுக்கு உரியதாகும் இதை 1990 காலப்பகுதிகளில் அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய விடுதலைப்புலிகள் தங்களின் காணிச் சுத்திகரிப்பின் ஒரு பகுதியாக முஸ்லிம்களை வதைத்து இடம்பெயரச் செய்தனர்
என்பது இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு.
தற்போது புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு  இப்பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களை மீள் குடியேற்றி வருகிறது  இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட  மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் அப்பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள்,வீதிகள் புனரமைக்கப்படவேண்டியிருக்கிறது
.எனவே நாமும் எம்மால் முடிந்த உதவிகளை  வழங்கி இம்மக்களின் வாழ்வுயர இறைவன் தந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம்
                நன்றி

No comments:

Post a Comment

  ©Eravur-ஏறாவூர் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo